பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 வாடி நில்லாதே - மனம் வாடி நில்லாதே - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே! ஒன்றுள துண்மை - என்றும் ஒன்றுள துண்மை - அதைக் கொன்றிடொண்ணுது குறைத்தலொண்ணுது! துன்பமுமில்லை - கொடுந் துன்பமுமில்லை - அதில் இன்பமுமில்லை பிறப்பிறப்பில்லை! படைகளுந் தீண்டா - அதைப் படைகளுந் தீண்டா - அனல் சுடவு மொண்ணுது புனல் நனையாது! செய்தலுன் கடனே - அறம் செய்தலுன் கடனே - அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே வில்லின யெடடா" என்று பகவான் சொன்னர். ஆதலால் பக்தனுக்குத் தொழிலிலே பொறுப்பில்லை, ஆனல் தொழிலுண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப் படும். உண்மையான தெய்வபக்தி உடையவர்கள் செய்யும் செய்கையில்ை கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்குவேண்டியதில்லை யென்று உதறி விட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக் கொண்டு மஹத்தான செய்கைகளைச் செய்வான்' என்று பிரம்மராய ஜயர் சொன்னர். அப்போது வீரப்ப முதலியார் என்னை நோக்கி, உமது கருத்தென்ன?" என்று கேட்டார். நான் 'எனக்கெனச்