பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புதிய ஆத்திசூடி (குறிப்பு : பாரதியார் இந்தப் பாடலில்தான் எல்லாச் சமயமும் ஒன்றே என்ற தமது உள்ளக்கிடக்கையைத் தெளிவாக வெளியிடுகின்ருர். மகமதுநபிக்கு மறையருள் புரிந்தோன், ஏசுவின் தந்தை' எனப் பல மதத்தினர் உருவகத்தாலே உணர்ந்துணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே என்று, ஆணித்தரமாக வெளியிடு கின்ருர். அதனியல் ஒளியுறும் அறிவாம்' என்று, அறிவே தெய்வம் என்றும் விளக்குகின்ருர். இவ்வாறு சிவன், விஷ்ணு என்ற தெய்வங்களையும் ஒன்றே என்று, மூன்று இடத்தில் வருகின்றது. விநாயகர் நான்மணிமாலையில்’ "சிவனே, கண்ணு, வேலா, சாத்தா, விநாயகா, மாடா, இருளா, சூரியா, இந்துவே, சக்தியே, வாணி, காளி, மாமகளேயோ, ஆணுய்ப் பெண்ணுய் அலியாய் உள்ள தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே, வேதச்சுடரே" (விநாயகர் நான்மணி மாலை அகவல் - 20) என்றும், 'விநாயகதேவய்ை, வேலுடைக்குமரய்ை, நாராயணய்ை, நதிச்சடை முடியனய், பிறநாட்டிருப்போர் பெயர்பல கூறி, அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும் தேவருந் தாய்ை, திருமகள் பாரதி உமையெனுந் தேவிய ருகந்த வான்பொருளாய், (விநாயகர் நான்மணிமாலை - அகவல் - 8). என்று கூறுகின்ருர். இவ்வாறே முரசு என்ற கவிதையிலும், தெள்ளத்தெளிவாக எல்லாசி சமயமும் ஒன்றே என்று கூறுகின்ருர். ஆகவே, இவற்றிற்குத் தனிக் குறிப்பு எழுதப்படவில்லை. இவ்வாறு பலமுறை கூறியதாக வேறு எந்த இடத் திலும் பார்க்க இயலாது. அது தெளிவுபற்றி வந்துள்ளது. பாரதியார் இக் கருத்துகளை வேறுவகையாகச் சொல்வியிருந்