பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாலும், ஆறுமுறை சொல்லியது இங்கு தனிப்பட்ட சிறப்பாகும். ஆகவே, ஆறு பாடல்களையும் ஒன்ருக இணைத்துத் தந்துள்ளேன். ஆதிசங்கரர் பலதரப்பட்ட ஹிந்து மதங்களே ஒன்றுசேர்த்து ஆறுமதங்களாகச் செய்தவாறே, பாரதியாரும் கூறியுள்ளார் என்று நினைக்கத் தோன்றுகின்றதல்லவா? மேலும், ஆறு என்ற எண்ணிக்கை மிக முக்கியமானது. அது பிரணவ மந்திரங்களே அடக்கிக் கொண்டிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பாரதியாரும் "ஆறு துணை' என்ற ஒரு சிறந்த கவிதை எழுதியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.) (காப்பு-பரம்பொருள் வாழ்த்து.) ஆத்திசூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துணராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலே அகற்றினர்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். 2. விநாயகர் நான்மணிமாலை அகவல் 20 இறைவி இறையவ னிரண்டு மொன்ருகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் உள்ளொளி யாகி யுலகெலாந் திகழும் பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!