பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வருவித்துக் கொள்ளுதலும் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையை ஞானத்தியிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேதரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட யக்ளும் அல்லது வேள்வியின் கருத்து. எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடைய ரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியபடி, அவன். சாணிலு முளன் : மற்ருங்கோர் அணுவினைச் சத கூறிட்ட கோனிலும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்: இங்கின்ற தூணிலும் உளன்; யான் சொன்ன சொல்லிலும் உளன். அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. "அவனன்றி ஒர் அணுவுமசையாது ஆதலால், இந்த உலக முழுவதும் பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மையுடையது: அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலே சொல்லியபடி, எல்லாப் பொறுப்புக் களையும் அவன் பாதங்களிலே சுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன் வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக்கொள்ளக் கடவோம் என்ற துணிவே, ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி. இங்ங்ணம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவ னுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாருத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதல்ை ஈசன் நம்மிடத்தே கருணை பூண்டு நமக்கு மோr ஸாம்ராஜ்யத்