பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஏழையர்க் கெல்லா மிரங்கும் பிள்ளை வாழும் பிள்ளை மணக்குளப் பிள்ளை வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை முப்பொழு தேத்திப் பணிவது முறையே. 5. முரசு தெய்வம் பலபல சொல்லிப்-பகைத் தியை வளர்ப்பவர் மூடர்: உய்வ தனைத்திலும் ஒன்ருய்-எங்கும் ஒர்பொரு ளானது தெய்வம். தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் கோயில் சிலுவையின் முன்னே-நின்று கும்பிடும் யேசு மதத்தார்; யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில் பற்பல சண்டைகள் வேண்டாம். 6. பாரதி அறுபத்தாறு “ஸாரமுள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன்; சஞ்சலங்கள் இனிவேண்டா, சரதந் தெய்வம்: ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் கானர்: எப்போதும் அருளை மனத் திசைத்துக் கொள்வாய்: