பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை குறிப்பு : இக்கட்டுரை 20-6-1920 இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமையைப்பற்றி பாரதியார் செய்த சொற்பொழிவின் ஸா ர மா கு ம் . பாரதியார் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்றுத் திரும்பி கடயத்திலே சில காலம் வசிக்கிருர். அப்பொழுது பொட்டல் புதுாரிலே தெற்குப் புதுமனைத் தெருவில் இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமையைப் பற்றிப் பேசவேண்டுமென்று கேட்டுக் கொள் கிருர்கள். அதற்கு இணங்கி, எல்லா வகை களிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸ்பை முன்னே சொற்பொழிவு நிகழ்த்துகிரு.ர். அப்பொழுது 'அல்லா, அல்லா, அல்லா என்று தொடங்கும் பாட்டுடன் சொற்பொழிவைத் தொடங்குகிருர். அநேகமாக இப்பாடல் பாடிய காலம் அதுவே யாகும். எல்லா மதமும் ஒன்றே என்ற பாரதியார் கொள்கைக்கு இது மற்றுமொரு சான்ருகும்.) (20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட் டல் புதுாரிலே தெற்குப் புதுமனைத் தெருவில் எல்லா வகை களிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸ்பையின் முன்னே, "இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற விஷயத்தைக் குறித்து பூரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.) இன்று மாலை எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின்மீது பாடிக்