பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள். வீசி நிற்கும் வளியைச் செய்தாள், வான்க ணுள்ள வெளியைச் செய்தாள், வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3 காளி ஸ்தோத்திரம் யாது மாகி நின்ருய் - காளி! - எங்கும் நீ நிறைந்தாய், தீது நன்மை யெல்லாம் . நின்றன் - செயல்க ளன்றி யில்லை போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கை (யெல்லாம். ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள்புரிந்து காப்பாய். 1 எந்த நாளும் நின்மேல் - தாயே! - இசைகள் பாடி வாழ்வேன், கந்தனைப் பயந்தாய் - தாயே! கருணை வெள்ளமான ய் மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில் சிந்தை யெங்கு செல்லும் . அங்குன் - செம்மை தோன்றும் (அன்றே! 2 கர்ம யோக மொன்றே - உலகில் - காக்குமென்னும் (வேதம்: தர்ம நீதி சிறிதும் - இங்கெ - தவற லென்பதின்றி மர்ம மான பொருளாம் - நின்றன் . மலரடிக்கண் (நெஞ்சம், செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசுகூடவேண்டும்! 3 என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்: குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த (வடிவும். நன்றை நாடு மனமும் . நீயெந் - நாளு மீதல் வேண்டும்: ஒன்றை விட்டு மற்ருேர் - துயரில் உழலும் நெஞ்சம் (வேண்டா. 4