பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பல்லவி ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய) அனுபல்லவி பயனுண்டு பக்தியினலே - நெஞ்சிற் பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய) சரணங்கள் 1. புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி பொற்பாத முண்டு அதன் மேலே; நியமமெல் லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; நெறியுண்டு; குறியுண்டு; குலசக்திவெறியுண்டு. (ஜய) 2. மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்; விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய) 3. அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி அருளென்னுந் தோணியி னலே, தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத் துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய) 18. யோக சித்தி (வரங் கேட்டல்) (குறிப்பு : பாரதியார் 1913-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இந்த அருமையான கவிதையை எழுதியிருக் கின்ருர். ஏதோ தமக்கு நேர்ந்த ஓர் இன்னலின் விளைவாக இந்தக் கவிதை எழுந்துள்ளது. சித்தத்