பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு புலன்களை வெட்டிப் புறத்தே எறிந்தே ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4 27. அறிவே தெய்வம் (குறிப்பு : வேதம் அறிவே தெய்வம் என்கின்றது. வீனக ஆயிரம் தெய்வம் உண்டென்று அலையவேண்டாம்; உண்மை ஒன்று; ஞானிகள் இதைப் பல பேரிட்டு அழைக் கின்றனர் என்று தெளிவாகக் கூறுகின்றது. பாரதியார். இதைப் பலமுறை வற்புறுத்தியிருக்கிருர். அறிவுதான் தெய்வம் என்பதை வற்புறுத்திப் பாடியிருக்கின்ருர் நம் கவிஞர். வேடம் கோடி உண்டு. ஆனல் அந்த வேடத் தைக் கொண்டு மயங்கவேண்டாம். அந்த வேடத் திற்குள் உண்மை ஒன்றிருக்கிறது. வேடத்தைக்கொண்டு இந்த உண்மையை அறியாமல் வீணுகச் சண்டை போடுவ தேன்? அது மடமை என்கிருர் பாரதியார்.)