பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 கண்ணிகள் ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளிரோ? மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்! - எத னுாடும்நின் ருேங்கும் அறிவொன்றே தெய்வமென் ருேதி யறியிரோ? சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளிரோ - பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே. நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே. போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே - உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே. கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெல்லாம் - நீவிரி அவலே நினைந்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ?