பொருட்களைப் பகிஷ்கரிக்கும் தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென்று ஐயர் கூறினார். அதனை பாரதியார் எதிர்த்தார்; கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தேசியக்கவி சி.சுப்பிரமணிய பாரதியார் ஐயரின் கருத்தை ஆட்சேபித்து வெளிநடப்புச் செய்தார். 19 கல்கத்தா காங்கிரசிலிருந்து சென்னை திரும்பிய பாரதி, தனது இந்தியா பத்திரிகையில் ' வங்காளிகளால் செய்யக்கூடிய காரியம் சென்னையார்களால் ஏன் செய்ய முடியாது? இவர்களும் இந்தியர்களே என்பதில் சந்தேகமுண்டா? அல்லது இவர்களுக்குத் தேசாபிமானம் இல்லையா?' என்று ஆவேசத்துடன் எழுதினார். பாலபாரத சங்கம் பாரதியார், சர்க்கரைச்செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, ஹரிஹர சர்வோத்தமராவ், மண்டயம் சீனிவாசன், ஆகியோரின் ஒத்துழைப்புடன் அன்னியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசியம் ஆகியவற்றை பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடன் பாலபாரத சங்கம் சென்னையில் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தில் இளைஞர்களும் மாணவர்களும் மிகுதியாக இருந்தனர். 20 பஞ்சாபி பத்திரிகையை ஆங்கில அரசு ஒடுக்கியதற்காக பாலபாரத சங்கத்தின் சார்பில் நடத்திய கண்டனக்கூட்டத்தில் 23.2.1907ல் சென்னையில் பாரதி பேசினார். இது தொடர்பாக ஜி.சுப்பிரமணியய்யர் தலைமையில் 27.2.1907ல் நடந்த கூட்டத்திலும் பாரதி பேசினார். 17.3.1907ல் பாலபாரதசங்க கூட்டத்திலும் பாரதி உரையாற்றினார். சென்னை வக்கீல்களும், மிதவாதிகளும், பாரதி கோஷ்டியுடன் சேராமல் பத்திரமாய் விலகியிருந்தனர். அச்சமயம் விபினசந்திரபாலர் பிரசங்கம் செய்ய பெஜவாடாவிற்கு வந்திருந்தார். அதையறிந்த சென்னை தீவிரவாதிகள் தங்கள் சார்பாக பாரதியாரை பெஜவாடாவிற்கு அனுப்பி பாலரை அழைத்துவரச் செய்தனர். 1 பாலர் சென்னை வந்து அமிதவாதக் கொள்கைகளை விவரித்து அநேக அருமையான பிரசங்கங்களை நிகழ்த்தினார். 21 19.ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், முதல் தொகுதி, 1982, பக் 177. 20.சீனி. விசுவநாதன், மகாகவி பாரதி சில புதிய உண்மைகள், 1984, பக் 98. 21. ஆக்கூர் அனந்தாச்சாரி, கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம், 1936, பக் 24. 14
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/15
Appearance