விபின சந்திரபாலர் சில்ஹட் நகரத்தில் காயஸ்த வமிசத்திலே தோன்றிய விபினசந்திரபாலர் கட்டக் நகரத்தில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து விலகி காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தார். மிகச்சிறந்த முறையில் பேசிடும் ஆற்றலைப்பெற்ற அவர் வங்காளி, வந்தேமாதரம் என்கிற ஆங்கிலப்பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். ஆந்திரபிரதேசம் விஜயநகரம், காக்கினாடா, ராஜமகேந்திரம் ஆகிய பிரதான ஊர்களில் பேசிவிட்டு 1907 மே 1ல் சென்னை வந்தார். சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், விக்டோரியா நகர மண்டபத்திலும் நடந்த பொதுக் கூட்டங்களில் பேசினார். மாணவர்களும், வக்கீல்களும் அவரிடம் பெரிதும் கவர்ச்சி அடைந்தனர். அவருடைய பேச்சுக்கள் சென்னை நகரில் காங்கிரஸ் தீவிரவாதக்கட்சியினருக்கு ஆதரவைப் பெருக்கியது. பாலர் கூட்டங்களுக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும், அவருடைய தோழர்களுமான தீவிரவாதிகள் தான் ஏற்பாடு செய்திருந்தனர். விபின சந்திரபாலர் சென்னைக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த வேளை பாஞ்சாலத்தில் லாலாலஜபதிராய் கைது செய்யப்பட்டார். அந்தச் செய்தி கிடைத்ததும், பாலர்தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தை (1907-மே.1, 2, 3, 4, 5, 7, 9) சென்னை நகர அளவில் முடித்துத் திருப்பினார்." “ விபினசந்திரபாலரின் பேச்சைக்கேட்டவர்கள் உணர்ச்சி பெற்று எழுச்சிகொண்டு தாங்கள் அனிந்திருந்த ஆங்கிலநாட்டுத் தொப்பிகளைத் தூர எறிந்து தீயிட்டுக் கொளுத்தினார்கள்.3 "இந்த பெங்காளிப்பாதகன் வந்து சென்னைவாசிகளையெல்லாம் ராஜத்துரோகிகளாக்கிவிட்டான்; இவனைக் கனநேரம் கவர்ன்மென்டார் சும்மா விட்டு வைக்கக்கூடாது; இவன் ராஜதுரோகி; இவனை உடனே ஜெயிலுக்குள்ளேனும் அந்தமான் தீவுக்கேனும் அனுப்பிவிடவேண்டும்" என்று அரசு ஆதரவு ஏடான சென்னை டைம்ஸ் அப்போது எழுதியது. நெருப்புக் கனலைக்கக்கிய “இந்தியா" ஆயிரம் நாய் குலைத்தாலும் சூரியன் தன் ஒளிமங்குமா? விபின சந்திரபாலர் தமது திவ்விய உபந்நியாசங்களால் ஜனங்களின் நெஞ்சைக் கவர்ந்து கொண்டுவிட்டார். பாலர் என்றால் ஸம்ரட்சகர் என்று அர்த்தம். இப்பெயர் இம்மகானுக்கே தகும் 24 என்று 11.4.1907 இந்தியா-பத்திரிகையில் 22. Shams - ul - Akbhar, News Paper Report, Conf. 1907, P 148. 23. CID Report May - Nov. 1907, P 22. 24. பாரதி தரிசனம், பாகம் 2, பக் 88. 15
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/16
Appearance