உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாக்கெடுப்பில் அது வெற்றி பெற்றது. பிரேரேபணை நிறைவேறி விட்டதாக அறிவிக்கப்பட்டது; ராஷ்விகாரிகோஷ் தலைமை ஆசனத்தில் அமர்ந்து தனது தலைமை உரையைத் துவங்கும் முன், திலகர் மேடையிலே தோன்றினார். தனது திருத்தப் பிரேரணையை அனுமதிக்க வேண்டுமென்று கேட்டார். சூரத்தில் மிதவாதிகளும் திலகரின் தலைமையிலான தீவிரவாதிகளும் மோதினர்; செருப்புக்கள் பறந்தன; நாற்காலிகள் மட்டுமின்றி காங்கிரசும் உடைந்தது. இந்த சூரத் காங்கிரசில் கலந்து கொள்ளத்தான் 1907 டிசம்பர் 21ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் கே.ராமஸாமி அய்யர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம்பிள்ளை சென்னைப் பட்டணத்திலிருந்து ஸ்ரீசக்கரைச் செட்டியார், ஸ்ரீதுரைசாமி அய்யர், ஸ்ரீசங்கரநாராயணய்யர், ஸ்ரீவெங்கட ரமணராவ், ஸ்ரீயதிராஜ் சுரேந்திரநாத், திருவல்லிக்கேணியிலிருந்து சில பிரபுக்கள், வெளியூர் கணவான்கள் ஆகியோருடன் சூரத் காங்கிரசிற்கு புறப்பட்டதை பாரதி தெரிவித்திருக்கிறார். 27 கலாட்டா காங்கிரஸ் சூரத்தை சென்றடைந்ததும், 1907 டிசம்பர் 24, 25ம் தேதிகளில் தனியாக சுதேசிய சங்கம் (நாஷனலிஸ்ட் கான்பரன்ஸ்) நடைபெற்றது. இரண்டு தினங்களிலும் ஸ்ரீஅரவிந்தகோஷ் (வந்தேமாதரம் பத்திராதிபர்) அக்கிராசனம் (தலைமை) வகித்தார். ஸ்ரீமான் திலகர் உபந்நியாசம் செய்தார். காங்கிரஸ் சபை கூடப் போவதன் காரியங்கள் இன்னின்ன என்பதை திலகர் விஸ்தரித்துக் கூறினார். அந்தக்கூட்டங்களில் பாரதி கலந்து கொண்டார். அதன்பின் டிசம்பர் 26ம் தேதி குழப்பத்துடன் சூரத் காங்கிரஸ் சபை ஒத்தி வைக்கப்பட்டது. ன 26ம் தேதி காங்கிரஸ் சபை கலைந்த மாலையில் சென்னை பிரதிநிதிகளின் கூட்டம் ஜி. சுப்பிரமணியஐயர்தலைமையில் நடைபெற்றது. அதிலே கலந்துகொண்ட பாரதி "இன்று மாலை நடந்த புதுக்கட்சியார் சங்கத்திலே ஸ்ரீதிலகரும் மற்ற தலைவர்களும் சொல்லிய விஷயங்களை என் மித்திரர் ஒருவர் வந்து என்னிடம் இப்போது தெரிவித்தார். அதை உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். இன்று பகலில் நடந்த அசம்பாவிதமான உ 26. செ. திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள், 1994, பக் 83. 27. ரா.அ. பத்மநாபன், பாரதி புதையல் பெருந்திரட்டு 1982, பாரதியின் எங்கள் காங்கிரஸ் யாத்திரை, பக்511. 18