காரியத்திற்கு யார் ஜவாப்தாரியாக இருந்த போதிலும், நாளை முதல் காங்கிரஸ் முடியும் வரை இம்மாதிரியான சம்பவம் நிகழ்வதற்குப் புதிய கட்சியைச் சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் இடம் கொடுக்கலாகாதென்று எங்கள் கட்சியாருக்கு திலகர் சொல்லியிருக்கிறார். ஐக்கியமே பலம். நிதானக் கட்சியாரும், நமது கட்சியாரும் சேர்ந்து பாடுபட்டால் தான் நமது தேச நன்மைக்கு விரைவாக ஹேதுவேற்படும். ஒற்றுமைக் குரலை ஒங்கி ஒலித்த கவிஞன் நமது கட்சியாரைக் காங்கிரசிலிருந்து பிரித்து விடுவதற்கு அவர்கள் பலவிதமாக முயற்சி புரிந்து வருகிறார்கள். அதற்கு என்ன வியாஜம் ஏற்படப் போகிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் ஏமாந்து போய் ஓர் வியாஜமேற்படுத்தி கொடுத்துவிடலாகாது. இன்று நடந்த குழப்பத்திற்கு நமது கட்சியார் முகாந்திரமில்லை யென்பதை நான் நன்றாக அறிவேன். ஆனால் அவர்கள், நமது கட்சியாரைத் தான் குற்றம் சொல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆகையால் நாளைக்கு சுரேந்திரநாதராகட்டும், அல்லது வேறெந்த நிதானஸ்தர்களாகட்டும், நம்மைப் பற்றி என்ன சொல்லிய போதிலும் நீங்களெல்லாம், வாய் திறவாமல் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் அவர்களுடைய பிரசங்கத்திற்கு எவ்விதமான தடையும் செய்யக்கூடாது என்று திலகர் வற்புறுத்தியிருக்கிறார். ஆதலால் இனிமேலும் நம்மிருகட்சியருள் ஒற்றுமையாக நயத்தில் காரியம் நடக்க வேண்டும் என்பதே திலகரும் அவரைப் பின்பற்றுவோர்களும் கொண்டிருக்கும் நோக்கமென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். காங்கிரஸ் சமயத்தில் நம்மவர்கள் இரைந்து மூச்சுக்கூட விடுவதில்லை யென்று மவுன விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்கு திருப்தி விளைவிக்குமென்று நம்புகிறேன்" என்று பாரதி பேசினார்.28 காங்கிரசின் ஒற்றுமைக்கு பாரதி குரல் கொடுத்தது இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் காங்கிரசின் வரலாற்றில் நீங்காவடுவாக காங்கிரஸ் அப்போது உடைந்து போயிற்று. மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் முடிவான பிரிவினை உண்டாக்கிய சூரத் காங்கிரசிலிருந்து திரும்பிய பாரதியார் திலகரின் புதிய கட்சியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். 1907இல் திலகர் 28. முன்னர் கூறிய நூல், பக். 528. 19
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/20
Appearance