செய்ததோர் பிரசங்கத்தை ஸ்ரீமத் பாலகங்காதரதிலகர் செய்த அருமையான உபந்நியாசத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு என்று THE TENETS OF THE NEW PARTY என்று வெளியிட்டார் பாரதி .29 மிதவாதிகளைப் பற்றி பாரதி "பெயருக்கு ஒரு கட்சி வேண்டுமென்ற நோக்கத்தோடும், பழைய கட்சி மிகவும் சௌகரியமாயிருப்பதாலும் இவர்கள் பழைய கட்சி தான் சரியென்று வாய்ப்பறையடிக்கிறார்கள். கோயிற் சொத்தை கொள்ளையடிப் பதற்காக தரும கர்த்தா வேலை பார்ப்பது போலவும், ஸப் ஜட்ஜ் வேலை வாங்குவதற்காக சட்டசபை மெம்பர் ஆவது போலவும், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சந்நியாசம் பெறுவதைப் போலவும், சென்னைவாசிகள் பலர் தத்தம் சொந்த நோக்கங்கள் நிறைவேறுவதற்காகவே பொது ஜனபிரதி நிதிகளென்றும் ஜனத் தலைவர்களென்றும் பற்பல போலி நாமங்கள் ஆடி உலாவுகின்றனர். இவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை உற்று நோக்கினால் இவர்களது யோக்கியதைகள் பட்டப்பகல் போல் விளங்கி விடும். காங்கிரஸ் சபையில் தலையை யாட்டியும், கையை நீட்டியும் பேசிவிட்டு அந்த மார்க்கமாகவே ஸ்தல தரிசனங்கள் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பும் இவர்கள் அடுத்த வருஷம் டிசம்பரில் தான் காங்கிரஸைப் பற்றி நினைப்பார்கள். காங்கிரஸில் செய்யப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் நடக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்குச் சிறிதும் கிடையாது என்று மிதவாதிகளைப் பற்றி கடுமையாகவே பாரதி குறிப்பிடுகிறார். ”திலகரின் தீவிரவழியில் பாரதி தீவிரகாங்கிரஸ் வாதியாக செயல்பட்டார். சென்னை ஜனசங்கம் 1907இல் சூரத்தில் காங்கிரஸ் பிளவடைந்ததற்குப் பின்னர் தேசியவாதிகள் கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் 29. முன்னர் கூறிய நூல், பக். 536 - 549 30. இளசை மணியன், பாரதி தரிசனம், பாகம் 2, பாரதியின் இந்தியா பத்திரிகைக் கட்டுரைகள், 1907 ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளிவந்தவை, 1977, பக் 24. 20
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/21
Appearance