உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் இசைவுடன் ஊர்வலமும், கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் வாணவேடிக்கைக்கும் இசை நிகழ்ச்சிக்கும், அனுமதி மறுக்கப்பட்டது. திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதிக்கு அருகில் வந்தவுடன், கூட்டத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 'விபின சந்திரபாலரின் விடுதலை என்பது சுதந்திரப் போராட்டத் தீரர்களுக்குத் திருவிழாவைப் போன்றதாகும். அந்த விழாவில் இசை நிகழ்ச்சி நடத்துதல் இயல்பு. இந்த இயல்பு சட்டத்தால் மறுக்கப்படுமானால் அதை மீற வேண்டுமென்பது' பாரதியின் கருத்தாக இருந்தது. எனவே, தடையை மீறி நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியை ஆதரித்து கூட்ட முடிவில் பாரதி பேசினார். 1908- ஏப்ரலில் காவல்துறையினரைத் தாக்கியதற்காக சிறை சென்று விடுதலையான இலட்சுமணய்யாவைப் பாராட்டி சென்னை ஜனசங்கம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதி பதக்கமும் வழங்கினார். திருவல்லிக்கேணி விளையாட்டுக்கழகம் பச்சையப்பன் கல்லூரி, கிறிஸ்தவக்கல்லூரி, மாநிலக்கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களையும் இளைஞர்களையும் அழைத்து வந்து இருட்டுகிற நேரம் வரை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதன்பின்னர் பாரதி அவர்களுக்கு அரசியல் கல்வியினைப் போதிப்பார். போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவி இளைஞர்களை நாட்டு விடுதலைக்கு தயார் படுத்திட பாரதி இந்த வழியைக் கடைப்பிடித்தார்." சுதேசி சாமான்கள் மட்டும் விற்பதற்கு ஒருகடையை ஆரம்பித்தவர் பாரதியார்.32 கிருஷ்ணசாமிஐயர் பாரதியார் கிருஷ்ணசாமி ஐயரைச் சந்தித்து தாம் இயற்றிய தேசிய பாடல்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுவது வழக்கம். இவற்றைக்கேட்டு பரவசமெய்திய கிருஷ்ணசாமி அய்யர் இந்தப் பாடல்களை அச்சிட்டு இனாமாக வழங்க ஏற்பாடு செய்தார். இதற்குப்பிறகு "ஸ்வதேசகீதங்கள் என்ற பெயரில் ஒரு தனி நூல் வெளியாயிற்று. இதுவே முதன் முதலாக வெளிவந்த பாரதியாரின் நூல் ஆகும். 33 31. முனைவர் கோ. கேசவன், பாரதியும், அரசியலும், பக். 81 32.வெ. சாமிநாத சர்மா, நான்கண்ட நால்வர், 1959. பக். 251. 33.மேலது. 22 22