வ.உ.சியை வாழ்த்திய பாரதி தெற்கே தூத்துக்குடியில் சுதேசி எழுச்சி, சுதேசி நீராவிக்கப்பல் கம்பெனியைத் துவக்கி, வ.உ.சிதம்பரம்பிள்ளை தனிப்பெருந்தலைவராகத் திகழ்ந்து கொண்டிருந்தார். அவரது அரசியல் ஆர்வத்திற்கு பாரதியே மூலவித்தாக அமைந்தார். 'பெரும்பாலும் பாரதியாரும், நானும் சிறிதுநேரம் தேச காரியங்களைப்பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். அப்பேச்சு அவரை கம்பராகவும், என்னைச் சோழனாகவும், நினைக்கும்படி செய்தது.நால்வரும் மாலை 5 மணிக்கு திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றோம் அங்கிருந்து வங்காளத்தின் காரியங்களையும், பெபின் சந்திரபாலர் முதலியோரின் பிரசங்கங்களையும், செயல்களையும், பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என் உள்ளத்தில் மின் மினிப் பூச்சிப் போன்று மின்னிக் கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்கு போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது' என்று வ.உ.சி.யே பாரதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 34 1908 மார்ச் 12ம் நாள் நெல்லையில் வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கிலேயே ஆட்சியின் அடக்குமுறைச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட போது நெல்லையில் பேரெழுச்சி ஏற்பட்டது; துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றன. அப்போது இந்தியா பத்திரிகையின் பார்வையாளராக நெல்லைக்கு வந்தார் பாரதி. 1908 ஏப்ரல் 27இல் பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குச் சென்று தேசபக்த செம்மல்களைக் கண்டுபேசினார். வ.உ.சிக்கு வாழ்த்து தெரிவித்தார். நெல்லை செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வ.உ.சி. கொடுந்தண்டனை பெற்றார்; அதன்பின்னர் பாரதியும் அரசின் கெடுபிடிகளில் அகப்படாமல் புதுவைக்கு தப்பிச்சென்றார். 1908-1918 இக்கால கட்டத்தில் நாட்டில் என்னென்னவெல்லாமோ நடந்து விட்டன. மக்களுக்கு நல்வழிகாட்டக்கூடிய தீவிரவாதப் பெருந்தலைவர்கள் சிறையிலே அடைபட்டு கிடந்தனர். நெல்லை ஆக்டிங் கலெக்டர் ஆஷ் வீரவாஞ்சி அய்யரால் மணியாச்சியில் 17.6.1911இல் சுட்டுக்கொல்லப்பட்டார். 15.9.1911ல் பாரதி 34. வி.ஓ.சி. கண்ட பாரதி, வ.உ.சி. எழுதி, வ.உ.சி. சுப்பிரமணியம் தொகுத்தது, 1946, சென்னை, பக் 7. 23
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/24
Appearance