மீது கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. பாரதியை பிடித்துக்கொடுத்தால் 1000 ரூபாய் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியில் பாரதி அடைக்கலம் புகுந்தார். பாரதியின் பாண்டிச்சேரி வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுவது என்றால் அதுவே ஒரு தனி சரித்திரமாகும். (எத்தனையோ, அறிஞர்கள் அதுகுறித்து தனிநூல்கள் எழுதியுள்ளனர்.) புதுவையில் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த பாரதியார் எண்ணற்ற கவிதைகளை அப்போது எழுதிவந்தார். அவ்வப்போது பத்திரிகைகளுக்கும், அரசியல் கருத்துக்களை எழுதி அனுப்பினார். 3.9.1914 இந்துப் பத்திரிகையில் திலகரின் கருத்தை ஆதரித்து மடல் தீட்டிய பாரதி தன்னாட்சியை விரும்புகிறோம். அகிம்சைக்கு ஆதரவு தருகிறோம் என்று அதில் குறிப்பிட்டார். 35 அரசியல் வானில் சோர்வுற்றிருந்த பாரதி இலக்கிய வானிலே ஜொலித்துக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் வ.உ.சியும் திலகரும், சிறையில் இருந்து விடுதலை ஆகிவந்தனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து அண்ணல் காந்தியடிகளும் இந்தியாவிற்கு திரும்பினார். 1915ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மகாசபை கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார். பிரிட்டிஷ் பிரெஞ்சு ஒப்பந்தம் முதல் உலகப்போர் முடிவுற்றது. அந்தவேளையில் பிரெஞ்சு இந்தியப் பகுதிகளில் உள்ள அரசியல் கிளர்ச்சியாளர்கள் குறித்துப் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் 26.4.1918இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி பிரிட்டிஷ் இந்திய அரசின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய அரசியல்வாதிகள் பிரெஞ்சு இந்தியப்பகுதிகளில் அடைக்கலம் புகுந்துள்ளனரென பிரிட்டிஷ் இந்திய அரசு எடுத்துக் கூறினால் அவர்களை உடனடியாகப் பிடித்து பிரிட்டிஷ் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. 36 35. A hundred years of the Hindu the Epic story of Indian Nationalism, p. 227. 36. கோ. கேசவன், பாரதியும் அரசியலும், பக் 128. 24
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/25
Appearance