இந்தக்காலத்தில் தான் பாரதி புதுவையிலிருந்து வெளியேற முடிவெடுத்தார். இதுகுறித்து சுதேசமித்திரன் உரிமையாளர் ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கு எழுதிக் கேட்டார் பாரதியார். வெளியே வருவதற்கு தக்க காலம் அதுதான் என்று ரங்கசாமி அய்யங்கார் பாரதியாருக்கு யோசனை சொன்னார்.37 புதுவையிலிருந்து வெளியேறல் 20.11.1918 அதிகாலையில் பாரதியார் தன்மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து வரும்போது, திருப்பாதிரிப் புலியூரில் அன்றைய சென்னை மாகாணப் போலீஸ் பாரதியை மட்டும் கைது செய்து கடலூர் துணைநீதிபதி முன் ஆஜர்படுத்தினர். ஜாமீன் விடுதலை அவருக்கு மறுக்கப்பட்டது. 24.11.1918இல் சிதம்பரம் முகாமிற்கு வந்த மாவட்ட நீதிபதியிடம் (கலெக்டர்) பாரதியைக் கொண்டு சென்றனர். கடலூர் சிறையில் கவிஞர் 1914ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச் சட்டத்தின் கீழ் (Ingrees into India Act) பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் விடுதலை இங்கும் மறுக்கப்பட்டது. 15 நாட்கள் காவலில் வைக்க ஆணையிடப்பட்ட பாரதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளுநர்பெட்லண்டுக்கு எழுதிய கடிதம் அரசியலின் அனைத்துச் செயல்களிலிருந்து விடுபட்டு விடுவதாகவும், பிரிட்டிஷ் அரசுக்கு நம்பிக்கையாகவும், சட்டத்தின்படி இயங்கும் குடிமகனாகவும் எப்பொழுதும் இருக்கப் போவதாக 10.12.1918இல் பாரதி ஆளுநர் பெட்லண்டுக்கு கடலூர் சிறையிலிருந்து கடிதம் எழுதினார். இதோ அந்தக் கடிதம் BHARATHY TO THE H.E. GOVERNOR OF MADRAS To His Excellency Lord Pentland OM SAKTHI Governor of Fort St. George Madras. 37.வ.ரா., மகாகவி பாரதியார், சென்னை, 1944, பக் 105. 25 District Jail, Cuddalore, 10th December, 1918
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/26
Appearance