பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


x!

பஞ்சகோண கோட்டை என்ற ஒரு சிறு கதையும் எழுதி விளக்குகின்றார்.

அதாவது பஞ்சகோண கோட்டை என்று ஒரு கோட்டை இருந்ததாம். அந்தக் கோட்டைக்கு நாற்புறமும் கல்லால் எடுத்த வலிமையான கோட்டைச் சுவர் உண்டு. ஆனல் அதன் ஐந்தாவது கோணமாகிய கோட்டை அப்படிக் கற்சுவரால் எழுப்பப்படவில்லை, அது மண் சுவரால் ஆனது. பகைவர் எதிர்த்து வந்தபோது நான்கு புறமும் கற்சுவரால் எழுப்பப் பட்டிருந்ததால் அதை ஒன்றும் அசைக்க முடியவில்லை. ஆனல் ஐந்தாவது கோட்டைச் சுவர் மண்ணுல் கட்டப்பட்டதென்று எப்படியோ பகைவன் ஒருவன் அறிந்துகொண்டான். பகைவர் மண் சுவரைத் தாக்கினர். கோட்டை வீழ்ச்சியுற்றது. நாம் அடிமைப்பட்டதற்கு அதுவே முக்கிய காரணம் என்று அந்தக் கதையால் எழுதியுள்ளார். அந்த மண்சுவர்தான் பஞ்சமர். அவரை ஆதரிக்காவிட்டால், நமது நாடு விடுதலை பெருது என்ற கருத்தில் பாரதியார் அந்தச் சிறு கதையை எழுதியுள்ளார். தொழில் செய்ய வேண்டும் சோம்பலாக இருக்கக்கூடாது என்று பாரதியார் பலவிடங்களில் சொல்லியிருக்கிறார். இரும் பைக் காய்ச்சி உருக்கிடுவீரே, யந்திரங்கள் வகுத்திடுவீரே என்ற கவிதையில் அது நன்கு வெளிப்படுகிறது.

‘எந்தத் தொழிலும் இழிவில்லை. சோம்பல்தான் இழிவு தரும் என்பது பாரதி வாக்கு. 1917-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி எழுதிய உள்ளருத்த விளக்கம்’ என்ற கட்டுரையில் ‘கை’ என்பதற்குத் தெலுங்கில் செய்’ என்று பெயர். க,ச மாறுதல் இயல்பு. ‘கை’ என்ற சொல்லுக்கே செய்’ என்று பொருள். தொழில் செய்யாமல் இருக்கும் கையை நெருப்பிலே வை, கரியாவது கிடைக்கும் என்றர்த்தம் என்கிரு.ர். இதிலிருந்து தொழிலின் உயர்வை எவ்வாறு மதிக்கிறார் பாரதியார் என்பதை அறியலாம்.

கண்ணன் பாட்டு மிகப் புகழ்பெற்றது. கண்ணனை த் தந்தை யாகவும், தாயாகவும், காதலனாகவும், காதலியாகவும் என்று இப்படிப்பட்ட பலவகை வடிவிலே வைத்துப் பாரதியார் பாடி

யிருக்கின்றார்,