பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


J.

சிந்தித்துப் பாருங்கள். பாரதியார் அக்காலப் பெண்களின் நிலைமையைப்பற்றி பாரதி நினைவுகள் என்ற திருமதி யதுகிரி அம்மாள் அவர்கள் தமது நூலிலே சுவையாக எழுதியிருக் கின்றார். பெண்கள் கூட்டமொன்றில் பேசியதாகச் சுதேசமித் திரனில் வெளிவருகின்றது. உடனே திருவல்லிக்கேணியில் பூகம்பம் ஏற்பட்டுவிட்டதாம்! பெண்களாவது பேசவாவது? அப்படிப் பேசினலும், அதைப் பத்திரிகைகளில் வெளியிட லாமா என்று பெண்களின் கூட்டத்தில் ஒரே அதிர்ச்சியாம்! திருமதி யதுகிரியம்மாளின் பாட்டியாரும், இன்னும் சில பெண் களும் சேர்ந்துகொண்டு, உடனே பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு விட்டார்கள். எப்படிப் பேசலாம் என்பதை ஒரே முழக்கமாக முழக்கிவிட்டு, இனிமேல் பேசுவதில்லை என்ற உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டுதான் திரும்பினர்களாம். அதன் பிறகுதான் திருவல்லிக்கேணியில் தலைகாட்ட முடிந்ததாம்! பெண்கள் கல்லூரிக்குச் சென்று படிக்க விரும்பிய காலத்திலும் அதே எதிர்ப்புத்தானம். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விக்தைமனிதர் தலைகவிழ்ந்தார் என்றும்,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் கடத்த வந்தோம் எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பில்லை காணென்று கும்மியடி. என்றும் துணிந்து பாடுகின்றார்.

பாண்டிச்சேரியில் திரு. கனகலிங்கத்திற்குப் பூணுரல் போட்ட செய்கையும் நாம் அறிவோம். எல்லாருக்கும் பூணுரல் போட்டுவிட்டால் ஜாதி வேறுபாடே அற்றுப் போகும் என்பது பாரதியார் கருத்து.

ஹரிஜனங்களை நாம் மிகமிகத் தாழ்த்திவிட்டோம், அதன் பலன்களைத்தான் இன்று அனுபவித்து வருகின்றாேம் என்பது பாரதியாருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இதுபற்றி,