பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


137

இவ்வுலகம் இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும்: இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறியபூமண்டலத்தின் மீதுதான் நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல்கின் றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினலே காண்கிருேம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணலே தூரத்திலிருந்தே பார்க்கிருேம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான்முழுதும் ஒரு மேற்கட்டிபோலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி: ஸஅர்யன் செய்கிற ஆயிரவிதமான ஒளியினங்கள், மலே, நாடு, நதி, கடல்-அழகு.

தவிரவும், எகைத் தொட்டாலும் இன்பமும் துன்ப மும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனல் நாம் அறிவினலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம். தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம். மண், இதன் விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்; இதன் தாங்குதல் இன்பம். காற்று, இதைத் திண்டினல் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம். உயிர் “ளுடனே பழகினல் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், இன்னுதல் இன்பம், உழைத்தல் இன்பம், உறங்கல் இன்பம், ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், “ண்ணுதல், அறிதல்-எல்லாம் இன்பந்தான்.

துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை

ஆனல் இவ்வின்பங்களெல்லாம் துன்பங்களுடனே

“திருக்கின்றன. துன்பங்களை அறிவினல் வெட்டிஎறிந்து பிட்டு இன்பங்களை மாத்திரம் சுவைகொள்ள வேண்டு