பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தேவ யாத்திரை செய்வோன் எப்போதும் அதைரிய படலாகாது. இஷ்டதேவதையின் அழகை ஒரு லக வருஷம் பாடுபட்டுங் காணுவிடின் அப்போதும் அதைரிய படலாகாது. (பஹா உல்லா. )

எந்த நாளும் அதைரியப்படாமல் இருப்பவனே பெருமை யடைந்து நித்தியானந்தத்தை உண்ணுகிருன், (மஹாபாரதம்)

நியாயமுள்ள மனிதன் ஏழுதரம் விழுந்தும் மறுபடி எழுகிருன். (பைபில் : பழமொழி.)

நித்யப் பொருளைக் காணும் பொருட்டாக நீ செய்யும் முதன் முயற்சி பயன்படாவிட்டால், அதனல் தைரியத்தை இழந்து விடாதே. விடாமுயற்சி செய்ய தெய்வத்தின் அருள் பெருவாய். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்)

உடம்பைப் பேணுதல்

சீன தேசத்து ஞானி யாகத்ஸ்உங்-த்ஸே என்பவர் சொல்கிறார் :-"மண்ணுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்ததோர் விம்பம்; அதன் பெயர் உடம்பு. அதனைத் தெய்வம் உன் வசம் கொடுத்திருக்கிறது. உன் காவலிலே யகப்பட்டிருக்கும் மண்ணை விண்ணுடன் இசைத்து (ஸம்மேளப்படுத்தி) நடத்துவதே உயிர் வாழ்க்கையென்று சொல்லப்படும்.’

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிறார்:-"உயிரும் உடம்பும் உள்ளே குணம், வெளியே குறி.’

“எபிக்தெதுஸ் என்ற கிரேக்க ஞானி சொல்லுகிறார்:

‘ஆத்ம சக்தியால் ஆத்மாவுக்கு விளையும் பயன் சரீரசக்தி யால் உடலுக்கு உண்டாகும்."