பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I95

ஸ்கஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான், மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்.”

இவ்வாறு எழுதிய மஹாகவி இக் கொள்கை யை நிலை நாட்டும் வழியைப் பற்றித்தான் மிகத் தெளிவாக ஒர் எச்சரிக்கை விடுக்கிரு.ர். அவர் கூறுகிறார் : ‘கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே யொழியக் குறைக்காது. பாபத்தைப் புண்ணியத்தாலே தான் வெல்லவேண்டும். பாபத்தைப் பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை. அதர்மத்தை தர்மத்தால் வெல்ல வேண்டும்: தீமையை நன்மையாலே தான் வெல்ல முடியும். கொலையையும் கொள்ளையையும் அன்பினலும் ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசிவரை கைகூடி வரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து. சிறிதுகாலத்திற்கு நோயை அடக்கிவைக்கும். பிறகு, அந்நோய் முன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக வலிமை யுடையதாய் ஓங்கிவிடும். ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேன பலத் தாலும் ஆயுத பலத்தாலும் மற்றாெரு கொலை யாளிக் கூ ட் ட த் ைத அடக்கிவிடக்கூடும். இதனலே தோற்ற கூட்டம் நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும். பிறகு, இதைப் பழிவாங்க முயன்று, மற்றது. பல வித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதுாக்கி அதை அடக்கும். இங்ஙனம் தலைமுறை தலை முறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்