பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


213

துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்கவேண்டும். ஆனால், ஸ்மயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸ்மயக் கொள்கை எக்காலத்திலும் மாருதது. ஆசாரங் தள் காலத்துக்குக் காலம் மாறுபடும் இயல்புடையன.

ஸ்ரீராமாயண மஹாபாரதங்களைப்பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும், ஸ்வதேச பக்தி, ஸ்வஜனபிமானம், ஸ்ர்வ ஜீவ தயை முதலிய புராதன வீரர்களின் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்முக உணர்த்தவேண்டும். சிபி சக்கரவர்த்தி புருவைக் காப் பாற்றும்பொருட்டாக தன் சதையை அறுத்துக் கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி, மாளுக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். இழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியாரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜன ஸ்மூஹக் கடமைகளில் மேம் பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.

(உ) ராஜ்ய சாஸ்திரம்

ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப் பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்து வருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம் முதலிய ஸெளகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும், நல்லொழுக்கமும்,

14- : . _t