பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக் குள்ளே சிலமூடர்-நல்ல

மாத ரறிவைக் கெடுத்தார்.

10. கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்

பேதமை யற்றிடுங் காணிர்.

7. புதுமைப் பெண் பாடல்கள்

1914–15

குறிப்பு : இப் பாடல்களை எழுதி வெளியிட்ட தேதி திட்டமாகக் காண மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டும். பாரதியார் எழுத்திலே இவ்வாறு கால வரிசை கண்டு பிடிப்பது மிக அவசியம். அப்பொழுதுதான் கவிஞருடைய எழுத்து, எண்ண முதிர்ச்சிகளை நன்கு கண்டு திறய்ைவு செய்ய இயலும். பாரதி தமிழ் என்ற தலைப்பிலே நான் வெளியிட்டுள்ள பாரதியார் கவிதைகள்.கதைகள், கட்டுரை கள் முதலியவை வெளிவந்த தேதியை, 1927-இல் அரிதில் முயன்று தேடித் தொகுத்து வைத்துள்ளதை, அந்நூலைப் படித்த பலரும் அறிவார்கள். இன்னும் பல கவிதைகள் வெளியான தேதிகளை அக்காலத்தில் நான் மிகவும் அருமை பாகப் பேணிவந்த பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட