பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1.

27

புதுமைப் பெண்

J945

போற்றி போற்றியோ ராயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்! சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றன பாரத நாட்டிலே துன்ப நீக்குஞ் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை மாதரசே யெங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திர மென்றுநின் வண்மலர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ? சாதல் மூத்தல் கெடுக்கு மமிழ்தமோ? தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை அடிமை யாக்க முயல்பவர் பித்தராம் நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தியி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம் நறிய பொன்மலர் மென்சிறு வாயில்ை நங்கை கூறு நவீனங்கள் கேட்டிரோ!