பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

ஆக்குள்ளே கொடி ய வ ைய் ஹிரண்யனைப்போல் இராப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் டேக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்போது லைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிருன். iாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணைபுரிய வாருங்கள்’ என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடு ஒறன். விடுதலைக்காற்று, வீர், வீர் என்று வேகமாக வீசுகிறது.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்விக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால், தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:

“நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானுல் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளில்ை ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. சிறிது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம்’ என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த rணத்தில் வேண்டும்,