பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன னுரை

“ஜாதி நூறு சொல்லுவாய் போ போபோ” பாரதியாருடைய இடிக்குரல் முழங்குகிறது. எளிய சொற் களைக் கையாண்டு எவ்வளவு வலிமையுடையதாகக் கூறலாம் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு. போ போ போ என்ற சொற்களிலே இடியைப்போலக் கர்ஜிக்கிறார் பாரதியார், உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்பதற்குச் சான்று பகர்வதைப் போல இந்தச் சொற்கள் அமைந்திருக்கின்றன.

பாரதியார் முதலில் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகத்தான் தமது வாழ்க்கையைத் தொடங்கினர். சக்கரவர்த்தினி என்ற திங்கள் இதழ் இதற்குச் சான்று பகரும்.

ஆனல், மிக விரைவிலே அரசியல்வாதியாகவும் பரிண மித்து விட்டார் பாரதியார். இந்தியா வார இதழ் இதற்கு நல்ல சான்று. இந்தியா வார இதழைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கமே நடுங்கிற்று. அதன் நெருப்பு மழையைத் தாங்க மாட்டாமல், இந்தியா வார இதழை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று பல பெருமுயற்சிகள் செய்தார்கள். பாரதியார் பாண்டிச்சேரிக்குத் தப்பி ஒடுவதென்றும், அங்கிருந்துகொண்டே தமது அரசியல் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் நாட்டைத் தட்டியெழுப்புவதென்றும், பாரதியாரின் குறிப்பிட்ட சில அன்பர்களால் தீர்மானம் ஆயிற்று.

பாண்டிச்சேரிக்கு சென்றதும்கூடத் தமது இந்தியா வார இதழைத் தொடர்ந்து நடத்த உதவ வில்லையாயினும் ஒருவகை யில் நன்மை பயந்தது. அங்குதான் வீரவிளக்கான வ. வே. சு. ஐயர் அவர்களையும், மஹான் அரவிந்தரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், பிரெஞ்சு நாடாகிய பாண்டிச் சேரியிலே பல முற்போக்கான எண்ணங்களைத் தருவதற்கும் அது உதவிற்று என்று கூறலாம். பிரெஞ்சு நாடு என்றுமே முற்போக்கு உடையது. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்