பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கொடுத்து வழக்கப்படுத்தினல் முறையே வார்த்தைகளும் உண்டாக்கிக் கொள்வார்கள். தமிழ் நாட்டிலே தொழில் வகைப்பாடும் ஆலோசனை மிகுதியும் ஏற்பட்டால் தமிழ் பாஷை அன்றைக்கே வளர்ந்துவிடும். அப்படிக்கின்றி இந்தப் பாஷையையே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்லுவது மகா மூடத்தனம் அல்லவா? கண்ணிலே வியாதி கொண்டிருக்கும் ஒருவன் அதன் மூல காரணங் களைத் தெரிந்து கொண்டு ஒளஷதப் பிரயோகம் செய்யா மல், இந்தக் கண்களையே ஒழித்து விட்டு நல்ல பிரகாச முள்ள இரண்டு பிரான்ஸ் தேசத்துக் கண்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசிப்பது நல்ல அறிவாகுமா? உன் கண்களை நீக்கிவிட்டுப் பிரான்ஸ் தேசத்துக் கண்களே வாங்கி வைத்துக்கொள்வது சாத்திய LDITP வா : ஏனையா சும்மா வளர்க்கிறீர்? நான் சொல்வதன் குறிப்பு உமக்குத் தெரியவில்லையே! தமிழ்ப் பாஷை இயற் கையிலே நவீனக் கருத்துக்களுக்குப் பொருத்தம் உடைய தன்று. இப்போது கவிதை விஷயத்தை எடுத்துக் கொள் வோம். இதற்கும் மின்சாரம் காந்தம் முதலிய பூத சாஸ்தி அபிவிருத்திக்ளுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையா தல்லவா? இதில்கூடத் தமிழ்ப் பாஷை ஏன் இத்தனை சீர் கெட்டு இருக்கிறது? டெனிஸன் முதலிய நவீன ஆங்கிலக் கவிகளையும், சூரியநாராயண சாஸ்திரி முதலிய தமிழ் நாட்டுப் புலவர்களையும் ஒப்பிட்டுப் பாரும். ஆங்கிலப் படிப்பற்ற தமிழ்ப் புலவர்களின் நிலைமை சொல்ல வேண்டியதில்லை. புல : யோசனையின்றி ஏனடா பேசுகிருய்? தமிழ் நாடு இப்போது சுதந்திரமும், சரீர பலமும், மனேபலமும் இழந்து இழந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எனவே இந்