பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. தேசீயக் கல்வி தமிழ், நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ்ப் பாஷையைப் ப்ரதானமாக நாட் டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினல், அது தேசீயம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோத மாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண சஹா யத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிக்கூடம் ! உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக் கூடம் வீதமாக எத்தனை பள்ளிக் கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்புங்கள். ஆரம்பத்தில் மூன்று உபாத்தியா யர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இந்த உபாத்யாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக இங்கனம் தமிழ் நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத் யாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்