பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 மாயினமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்தெடுத்தால் நன்று. அங்ங்ணம் தேசாபிமானம் முதலிய உயர்ந்த குணங்கள் ஏற் கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுதற் குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கியமும், திட சரீரமும் உடைய உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுப் பது நன்று. தேச பாஷையின் மூலமாக சரித்திரப்படிப்பு மட்டுமே யன்றி மற்றெல்லாப் பாட ங் க ளு ம் கற்பிக்கப்பட மேண்டுமென்பது சொல்லாமலேயே விளங்கும். தேச பாஷையின் மூலமாகக் கற்பிக்கப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந் தாது போய்விடுமன்ருே? ஜின ராஜ் தாஸரின் கருத்து: கல்வியைப் பற்றிய மூலக் கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும் பொது, ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப் படுத்தும்போது இடத்தின் குணங்களுக்கும். ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வைவ்வேருய்ப் பிரிந்து தேசீயமாகி விடுகிறது. இந்தியாவில் மாத்திரம் கதேசியக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரம் ஹிந்து தேச சரித்திரமும், தேச பாஷையும் கற்றுக் கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசிய ஞானம் ஏற்படாது. சென்னையில் பிரஸிடென்ஸி காலேஜ்' என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேச முறையைத் தழுவியதன்று. பழைய இத்