பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தமிழ் நாட்டு நாகரிகம் தமிழ் நாகரிகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்தி லே பொதுப் படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கிறேன். பண்டைத் தமிழ் நாகரிகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமாக ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில், தமிழ் நாட்டுக்கு மூல அரண் போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும், மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரிகத்துக்கும் எப் போதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரிகமோ ஸ்திரீகளை முன்னிட்டு விளங்குவது. மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும் புராதன மான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற் காலத்திலும் சேர நாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே: தமிழ் நாட்டு வேந்தருள்ளே சேர்த் தென்னப்பட்டு வந்தனர். பாஷையை யொப்பவே நாகரிக விஷயத்திலும் மிகப் பழைய தமிழ் நாகரிகமும் மிகப் பழைய மலையாள நாகரிகமும் ஒரே வஸ்துதான். பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலை யாள நாடு பழைய தமிழ் நாகரிகத்தை இயன்றவரை சிதையாமல் காப்பாற்றிக் கொண்டு வந்தது மலை யடிக்கு கீழக்கே மைதானந்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ் நாகரிகமோ வெனில், தெலுங்கு முதலிய வட நாட்டுப் பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள்