பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

flኝ0 அதாவது, உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல், பொருள், ஆவி மூன்றையும்'தத்தம் பண்ணிவிடுதல்; நமது பொருளாலும், வாக்காலும் மனத்தாலும், உடற் செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக் கினியன செய்தல்; பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகை யென்று பலர் தவருகப் பொருள் கொள்கிரு.ர்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்ருே? வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்குப் பிராண தானம் செய்தல் ஈகையன்ருே ? பொருள் முதலிய நலன் களையெல்லாம் ஒருவன் தனக்குத்தானே சேகரித்துக் கொள்ளக்கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக் குக் க்ல்வி பயிற்றுதல் தானமாகாதா? எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்தி லேனும் செய்யப்படும கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ் வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம். இனி தீய செயல்கள் செய்யாதபடி எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியலேனும் சரீர முயற்சியாலேனும் சேக்ரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள் வாத்தியங்கள், பதுமைகள் முதலிய செளக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்ப தற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும் இப் பண்டங்களுக்கெல்லாம் பொதுக் குறியீடும் பிரதியு மாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற்காசு, வெள்ளிக் காசு, காகிதப் பணம் முதலியனவும் செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும். நற்செயலாலே சேர்க்கப்படும்பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும் தீச்செயல்கள் செய்து சேர்க்கும் பொருள் பலவிதத் துன் பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரிய