பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 "சுதேசமித்திர'னில் வெளிவந்த குறிப்பு வருமாறு: தமிழ் பாஷையின் இனிமை ('மித்திரன்”, 1906 ஸெப்டம்பரில் வெளிவந்த குறிப்பு) பாற் கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்கால மாக வழங்கி வரும் உண்மையாகும். அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபை யார் முன்பு செய்த உபந்தியாசத்திலே நல்லதோர் திருஷ் டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை இங்கிலீஷிலே மொழி பெயர்த்தவரும் அநேக இலக்கண நூல்கள் பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ் நாட்டாரில் பெரும்பான்மை யோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிருர்:-"அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக் கொண்டு இடர்ப்படுகிருர்கள். இப்படிச் செலவிடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக (ஆங்கில) மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத் திற்கும், செவி நுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷை யைப் போல் எந்தப் பாஷையும் ஒத்து வருவதில்லை' என்ருர். இவர் தமிழ்ப்பாஷையின் இனிமையையும் பெரு மையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசி யிருக்கிருர். ஆனல் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்ம வர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றே னும் சிறிதும் முயல்வதில்லை.