பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 யிரம் அபிநயங்களிற் காட்டுகிருர். இந்த ரஸ்த்திற்குப் பாவம் பயம். மானுக்கும், முயலுக்கும், சில மனுஷ்யருக் கும் இயற்கையாகவுள்ள பயத்தை இவர் அபிநயத்தில் பூதக்கண்ணுடிபோலக் காட்டுகிரு.ர். அந்த பாகவதர் சில தினங்களின் முன்பு என்னைப் பார்க்க வந்தார். "ஹாஸ்ய ரஸம், ரெளத்ர ரஸம், வீரரஸ்ம், அற்புதம், சாந்தம் என்ற ஐந்து ரஸங்களையும் நீங்கள் தீண்டவேயில்லை. அதென்ன காரணம்?' என்று கேட்டேன். அந்த பாகவதர் சொல்லு கிருர்:-"நான் என்ன செய்வேன்? நான் நாட்டிய சாஸ் திரம் படித்தது கிடையாது. ஊரிலே கண்ட அபிநயங்களை நான் நடித்துக் காட்டுகிறேன். ஹிந்துக்களிலே அடிமைத் தனம் அதிகம். ஆதலால், எனக்கு 'நைச்ய பாவம், என்ற அடிமைத் தோற்றம் காட்டுதல் மிகவும் ஸுலபமாக வருகிறது. வீர ரஸம் காட்டச் சொன்னல் எப்படிக் காட்டு வேன்? நான் பிறந்தது முதலாக இன்றுவரை ஸஞ்சாரம் செய்து வந்திருக்கிற ஏழெட்டு ஜில்லாக்களில் ஒரு வீரனைக் கூடப் பார்த்ததில்லை. வீர ரஸத்திற்கு நான் எங்கே போவேன்?" என்று சொன்னர். அப்போது நான் "ரஸ் பண்டாரம்' என்ற ஸம்ஸ்க்ருத சாஸ்திரத்திலிருந்து பின் வரும் பொருளுடைய சுலோகங்களை அவருக்குப் படித்துக் கட்டினேன். அந்த நூல் சொல்லுகிறது: பலோக நடையினலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தை பயிற்சியினலே விஸ்தாரப் படுத்துகிரு.ர்கள். ரஸ்திருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம், ரஸ்வான் களுடைய பழக்கத்தாலும் பக்தி வழிக்ளே அனுசரிப்பதன லும் ஒருவன் ரஸ்க் காட்சியை வருவித்துக் கொள்ளலாம். "ராகத் துவேஷங்களே ஜயிப்பதளுல் ஒருவன் சித்தி சமாதி யடைகிருன். அப்போது ஞானதிருஷ்டி புண்டா திறது. அந்த ஞானதிருஷ்டி யுடையவர்கள் புறப்பயிற்சி