பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41 கிற மாதிரிகளும், கடைக்கண் காட்டுகிற மாதிரிகளும், தோளையும் வயிற்றையும் குலுக்குகிற மாதிரிகளும், மெல்ல மெல்ல பாகவதருடைய அபிநயங்கள் பக்தி ரளத்திலிருந்து சிருங்கார ரளத்தின் தோரணைகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்படி சிருங்காரத்தின் அபிநயங்களிலேயும் மேற்படி பாகவதர் குற்றமில்லே. புருவமும், கடைக்கண் முதலிய வற்றை மிகத் திறமையுடன் வெட்டுகிரு.ர். சிருங்கார ரஸத்திற்கு, "பாவம் ரதி சந்திரன், சந்தனம் முதலியன உத்தீபனங்கள் அல்லது தூண்டுதல்கள் என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது. மேற்படி பாகவதர் சந்திரன் முதலியவற் றைக் கண்ணுலே குறிப்பிடுகிரு.ர். ஆனல் இவர் புருஷராக இருந்தும் புருஷாபிநயங்கள் குறைவாகவும், நாபிகாபிநயங்கள் அதிகமாகவும் கற்றிருக் கிற விந்தை குறிப்பிடத்தக்கது. மேற்படி நைச்ய பாவத்திலே, அதாவது அடிமைத் தோற்றம் காட்டுவதிலேகூட. இவர் இந்தப் பெண்மை யைக் கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது. ஆண்டை யின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும் தாளி பாதியுமாகக் காட்டுகிருர், இருந்தாலும், பாகவதருடைய முகத்தில் காட்டும் அபிநயங்களைப் புகழ்ந்து சொல்லுதல் நம்முடைய கடமை. ஊடலை மாத்திரம் முகத்தில் தொண்ணுாற்ருென்பது அபி தயங்களிற் காட்டுகிருர். இப்படி மற்ற வகுப்புக்களையும் சேர்த்தால் எத்தனவித அபிநயங்களாகும்? நிறைய ஆகும் அல்லவா? கருளு ரஸத்தின் பாவம் சோகம் என்று சொல் லப்படும். இதைக் காட்டுவதில் மேற்படி பாகவதருக்குத் தோடாப் பண்ணிப்போடத் தகும். இன்னும் ஒன்று, கடைசி. அதிலேதான் அந்த பாகவதர் முதல்தரமான வேலை செய்கிருர். அதாவது, பயாநக ரஸத்தைப் பதின a fre—3