பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ சில சமயங்களில் உல்லாசத்தின் பொருட்டாகவும் நாடகங் கவிலே சேருகிருர்கள். இவர்களுக்கு ஏராளமான பாட்டு வேண்டியிருக்கிந்து. பழைய மெட்டுக்களும் அர்த் தம் தெரியாத கடுஞ் சொற்களும் இவர்களுக்கு அவசியமில்லை. தமிழ்ப் புலவர்களிடம் போனல் நிகண்டுக்குக் கூட அர்த்தம் தட்டும்படியான வார்த்தைகள் எழுதிக் கொடுப் பார்கள். சாமான்ய பாஷையில் எழுதும் தொழில் புலவர் களுக்குத் தெரியாது. பெரும்பாலும் இவர்களுக்கு ஸங்கீதம் தெரியாது தீவிரமான தாள கதியும், மதுர மான இசையும் உடையனவாய் நடிகனுக்கு உதவக் கூடிய பாட்டுக்கள் நாடகக்காரருக்கு வேண்டும். "தவிரவும் தமிழ் ஸங்கீதம் பல வருஷங்களாகப் புதுமையும் உல்லாலமும் இழந்து சோர்ந்து இருக்கிறபடி, யால், நாடகக்காரரும், நாடகம் பார்க்கப் போகும் பொது ஜனங்களும் ஹிந்துள்தானி, பார்ஸி மெட்டுகளையே விரும்புகிருர்கள். ஆகவே இப்படிப்பட்ட மெட்டு களுக்குச் சரியான பதங்கள் சேர்த்துக் கொடுப்போர் எவ்வளவு மூடராக இருந்தாலும் இவர்களே நாடகக்காரர் ஆவலுடன் ஏற்றுக்கொள்ள நேருகிறது. கவிதா ரஸங் களைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தால், இன்றைக்கு நாடகம் நடக்க வேண்டுமே, இதற்கென்ன செய்வது? புதிய கவிதை புலவர்களிடம் தோன்ற வேண்டும். புதிய மெட்டுகள் தமிழ்நாட்டு சங்கீத வித்வான்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தமிழ் நெறிக்கு இசையாத பார்ஸி மெட்டுகளும், காதைத் தொளைக்கும் பாமரமான பதவரிசைகளும் நாடகத்தை விட்டு நீங்கும்.