பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 தமிழ்நாட்டில் நாடகம் "தமிழ் நாட்டில் நாடகப் பாட்டுக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்காக அதிகப்பட்டு வருகின்றன. ஆளுல் இவற்றிலே தெளிவு, அறிவு வளம், கல்விப் பயிற்சி, சொல் நயம், ரச ஒளி முதலிய லக்ஷனங்கள் கொஞ்சமேனும் காணப்படவில்லை வண்டிக்காரன் பாட்டு, பாம்புப் பிடாரன் பாட்டு முதலிய பாமரப் பாட்டுக்களிலே இலக்கணப் பிழைகள் இருந்தபோதிலும் கவிதா ரஸம் அமைந்திருப்பது காண்கிருேம். இந்த நாடகப்பாட்டுக்கள் வெறும் பாமரமாக இருப்பதுடன் கவிதா ருசி அணுக்கூடக் கலக்காமல் பெரிய பீடையாக ஏற்பட்டிருக்கின்றன. மேலும் தமிழ்ப் பாஷையின் இயல்புக்குப் பொருந்தாத மெட்டுகளில் நாடகக்காரருக்கு எப்படியோ பிரியம் உண்டாகி யிருக்கிறது. இதற்கெல்லாம் விமோசனம் என்ன?’ என்று ஒரு தமிழ்க் கவிஞரிடம் கேள்வி போடப் பட்டது. அதற்கு அவர் சொல்லிய மறு மொழியை இங்கு எழுதுகிறேன். "இந்த விஷயத்தில் நாடகக்காரரைக் குற்றம் சொல்வது ஞாயமில்லை. பெரும்பாலும் நமது நாட்டில் ஏழை வாலிபர்கள் சங்கீதத்திலும், உல்லாசத்திலும் பிரிய முடையவர்களாக இருக்கும்பொழுது, ஜீவனத்துக்காகவும்.