பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இ. அ. ச. ஞானசம்பந்தன்

பெரியோரின் உள்ளம் எங்கும் பெருகல்போல் பெருகச் செய்தான்

என்றும் கூறும் உவமைகள் இணையற்றவையாய்ப் புரட்சிக் கவிஞரின் கவித் திறனுக்குக் கட்டியம் கூறும். பகுதிகளாய் அமைந்து நிற்கின்றன.

உவமையின் வளர்ச்சியாகிய உருவக அணியும், கவிஞருக்குக் கவினுறப் பணிபுரிகின்றது.

தெளி தமிழ் பவனி வந்தாள், செவிக்கெலாம் காட்சி தந்தாள்

என்ற உருவகமும், இரவுக்கு வரவேற்பு என்ற இடத்தில்,

மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை விருந்துண்டு, நீல ஆடை மாற்றுடை யாய்உ டுத்து மரகத அணிகள் பூண்டு, கோற்கிளை ஒடுங்கும் புட்கள் கோட்டிடும் இறகின் சக்தக் காற்சிலம் பசையக் காதற் கரும்பான இரவு தன்னை

என்ற பகுதியும் ஈடு இணையற்று விளங்குகின்றன. இரண்டாவது பகுதியாகவுள்ள விருந்தோம்பலில் "மக்கட் பேறு', "பிறர் நலம்' என்ற தலைப்புகளில் அவர் கவிதை ஊற்றின் ஆணிவேராக உள்ள திருக் குறளைச் சாறாகப் பிழிந்து தருகின்றார்.