பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 145

மறுபடியும் அவருடைய உணர்ச்சியால் உந்தப் பெற்று இடைப்பிறவரலாகச் சாதி வேற்றுமையைக் கண்டிக்கத் தொடங்கித் தமிழ்நாட்டில் சமையல் முறை முன்னேற்றமின்றிப் போனதற்கும் காரணம் சாதி சமய வேறுபாடுதான் என்ற முறையில் பேசத் தொடங்கிவிடுகிறார். 'விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்' என்ற பகுதியில் இடைப்பிறவரலாக உள்ள இப் பகுதி காணப்படுகிறது. மூன்றாம் பகுதியாக உள்ள திருமணம் என்ற பகுதியில் பழைய தமிழ் மண முறையாகிய களவு முறையையும் ஒருவாறு புகுத்தித் தமிழ்நாட்டில் உறவினர்களுக்குள் இயல்பாக ஏற்படுகின்ற குடும்பப் பகை முதலிய எல்லாவற்றையும் புகுத்திக் காட்டிக் குழந்தைகள் பொருட்டாக அவற்றை மறக்கவேண்டிய இன்றியமை யாமையும் பாடிச் செல்கிறார். உறவினருள் ஏற்படும் பகை, காரண காரியமின்றி ஏற்படும் பயித்தியக் காரத்தனமான ஒன்று என்பதையும் இப் பகுதியில் விளக்கியுள்ளார். . நான்காம் பகுதியாகிய 'மக்கட் பேற்றில் தமிழ்நாட்டில் சூல்கொண்ட மகளின் தாய் தந்தையராலும், ம்ாமன் மாமியராலும் கணவனா லும் அதிகமாகப் போற்றப்படுகின்ற சூழ்நிலையை யும் சூல்கொண்ட மகளிரின் வளர்ச்சி முறையையும் மிக அழகாக எடுத்துக்காட்டிச் செல்கிறார்.

ஐந்தாம் பகுதியாக உள்ள முதியோர் காதல்’ என்ற பகுதியில் மறுபடியும் கவிஞர் மிக உயர்ந்த கவித் திறத்தை அதாவது முதல் பகுதியில் இருந்தது. போன்ற ஒரு தரத்தை எட்டிப் பிடிக்கின்றார். அன்புள்ளம் கொண்ட இரு முதியவர்களின் அன்றாட வாழ்க்கையை, மனத் தத்துவம் மாறாமல் எடுத்துப்

11