பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I00 இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்ருல், துணிவு உள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நமது முன்னேர் கள் மதிக்கிரு.ர்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல் புடைய கோழையொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி யென்றும் சொல்வானைல் அவனை நம்பாதே; அவன் முகத்தை நோக்கிக் காறி யுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல் :"அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராமபாண பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணுக்கி யிருக்கக் கூடும். ஆனல் அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளி யாகமாட்டாய். அஞ்சா மைக்கும் அறிவுக்கும் நமது முன்னேர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிரு.ர்கள். அதை நீ கேள்விப் பட்டதில்லை போலும்!” ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் முடன்தான். விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய் கிருனே, அவனே ஞானி. ஹரி: ஓம்’ என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான். சிவாஜி மஹாராஜா தனது சொந்தப் பிரயத்தனத் திலுைம், துணிவாலும், புத்திகூர்மையாலும் அவுரங்க சீப்பின் கொடுங்கோன்மையை யழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்தி தர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப் படிப்பில் தேர்ந்தவர் அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீrைகள் தேறி 15 ரூபா யைக்கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும் ஆத்மாவையும் விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள் ஆயிரக்