பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 நவீன நாகரீகப் பொறுப்புகளைத் தீவிரமாகவும் தகுதியாக வும் தரித்து வருகிருள். 'ஜப்பான் ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது. 'உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமையிருக்கிறது. மேல்தோல்தான் காய்ந்து போயிருக்கிறது. அதைக் கழற்றியெறிந்து விட்டு, அதற்கு அப்பால், ஒடுகிற கால நதியிலே முழுகி ஸ்நானத்தைப் பண்ணியெழ வேண்டும். தற்காலத்துக்குப்பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிரிருந்த போதிலும் செத்த வனுக்கு ஸ்மானமே. இது ஜப்பான் சொல்லிக்கொடுத்த விஷயம். பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை, புதிய காலமாகிய வயலிலே நடவேண்டும். இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். 'ஜப்பான் பிறரைப் போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப் போல் ஆகவேண்டுமென்று பாவனைகள் காட்டினல், வலிமையுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்; கோணல்களை வாங்கக்கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்ட தனித் தனி குணங்கள் பலவுண்டு. எல்லா தேசத்தாருக்கும் பொதுவான மானுஷிக குணங்கள் பலவுண்டு. பிறரிடம் ஒன்றை வாங்கிக் கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக் கொள்ளவேண்டும்.' ரவீந்திர கவியின் உபந்யாலத்தை ஜப்பான் தேசத் தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிருர்கள். பத்திரி கைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லா தேசங் களிலும் போய் பாரத தேசத்தின் அறிவு மஹிமையை