பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 அந்த யோசனையைத் தழுவியும் அதற்குத் தாங்களும் உதவி புரிவதாகக் கூறியும் வந்தனர். ஆனல் மேற்கூறிய யோசனை இந்தியாவுக்குத் தகுதியுடையத்ல்ல. அப்படி ராஜ்ஜியத்தைத் தந்து மேற்பார்வை மாத்திரம் பார்க்க ஆங்கிலேயர் இசையமாட்டார்களென்று பல தடவையும் உதாரணங்களால் காட்டிவரும் சில புத்திமான்களின் உறுதிமொழியைக் கேட்டும் இன்னும் சிலருக்குப் புத்தி மாறவில்லை. "வருங்காலம் வந்தால், தானே எல்லாம் வந்து சேரும். நாம் பொறுமையோடு இருக்க வேண்டும்' என்று புத்தி சொல்கின்றனர். இம்மாதிரியாக ஊழ் வினையை எதிர்பார்க்கும் சாதுக்கள் தங்கள் கோழைத் தனத்தையும் மூடபக்தியையும் கைவிட்டு நாம் சுயாட்சி பெற ஆவலுடையவராக இருக்கிருேமென்பதை ராஜாங் கத்தாருக்கு உறுதிமொழியாகச் சொல்லி அதைப் பெறும் வழியைத் தேடுவதே உசிதமாகும். நாம் ஒரே நெறியில் நின்று நமது குறையை முடியாராகில் ராஜாங்கத்தாருடன் நாம் ஒத்து நடக்க முடியாதென்பது பகிரங்கமாய்ச் சொல்ல வேண்டும். இந்தியர்கள் இன்னும் ஆளும் திறமை வாய்ந்தில்லையென்று சாக்குச் சொல்லிப் பொழுது போக்கு கின்றனர். அப்படியே ஆளும் திறமையில்லையென்பதை நாம் ஒத்துக் கொள்வோம். ஆனல்.ராஜாங்கத்தின் கீழ் அப்படி சுயாட்சிக்கு வேண்டிய கல்வி மார்க்கம் ஏதாவது ஏற்படுத்தியிருக்கிரு.ர்களா? 'நாம் என்றைக்கும், அதோ ராஜாங்கத்தார் குற்றம் செய்தனர், இதோ எங்களுக்குத் தீமை நேர்ந்தது' என்று முறையிட்டுக் கொண்டிருப் போமேயன்றி நமக்கு சுயாட்சிக்கு வேண்டிய பழக்கங்கள் பெறுவது அசாத்தியம் என்பது நிச்சயம். நமக்கு என்றைக் கும், ராஜாங்கத்தாருடைய சாதுர்ய செய்கைகளைக் கண்டு வியந்து பேசியும் ஆச்சரியப்பட்டும் அவர்களைப் பூஜித்தும் வருவதே தொழிலாகி விட்டது. இதுதான் நாம் பிறந்த