பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழகத்தை அதன் உறக்க நிலையிலிருந்து விழிப்புறச் செய்தவர் பாரதியார் என்று கண்டோம். தமிழ் நாட்டிலே ஒரு புதிய வேகம்; தமிழிலே ஒரு புதிய வலிமைமிக்க மலர்ச்சி-இவற்றை உண்டாக்குவதற்குப் பாரதியார் முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கண்டோம். தமிழா உனக்கு நல்ல காலம் வருகிறது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிருர்கள்; தெய்வங்கண்ட கவிகள், பல தொழில் வல்லோர், பல மணிகள் தோன்று கிருர்கள். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிரு.ர்கள் என்று முழங்கினர் அல்லவா? இவ்வாறு முழங்கும் போதே பாரதியார் ஒர் உண்மையை மட்டும் மறக்கவே இல்லை. அவருடைய திருஷ்டி வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைக்குள் ஒருநாளும் அடங்கியிருக்கவில்லை. அவருடைய பரந்த உள்ளம் பாரத சமுதாயத்தை என்றும் எண்ணிக் கொண்டே இருந்தது. வாழிய செந்தமிழ் என்று பாடினர்; மெய்தான். வாழ்க நற்றமிழர் என்று ஆழ்ந்த அன்போடு வாழ்த்தினர்; அதுவும் மெய்தான். ஆனல் அடுத்த கணத்திலே என்ன கூறுகின்ருர் AAAAAA AAAA S AAAAA AAK K AAAA S AAAAA AAAA AAAA AAAA SAAAAA AAASS معمجدد மானபதைக கூாநது நோகக மவனரும.