பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அடுத்த வரியிலேயே வாழிய பாரத மணித்திருநாடு என்று பாடுகின்ருர். இதை நாம் மறந்துவிடக் கூடாது. வாழிய செந்தமிழ் என்றபோது அவர் முதல்முதலிலே மழலை பேசிய தாய்மொழியை நினைக்கிருர்; வாழ்க நற்றமிழர் என்றபோது அவர் இளமைப் பருவத்தே தவழ்ந்து விளையாடி ஆடியோடித் திரிந்த தம் தோழர் களாகிய தமிழர்களை நினைக்கிரு.ர். தாய்மொழியையும், தாம் புழுதியளைந்த தமிழ்த்திரு நாட்டையும் நினைப்பது இயற்கைதானே? ஆனல் அதே சமயத்தில் அவர் பாரத சமுதாயத்தை எண்ணுகிரு.ர். பாரத சமுதாயத்தில் தமிழ்நாடு பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை அவர் போதிக்கிருர். தமிழ் ஜாதியின் மேலுள்ள அளவற்ற அன்பினல் அதை ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்று நெல்லையப் பருக்கு எழுதிய கடிதத்திலே கூறிக்கொள்கிருர். ஆர்ய ஜாதியை அவர் மறந்து தமிழ் ஜாதியை அவர் நினைக்கவே இல்லை. இதைத்தான் நாம் நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்ய ஜாதி என்று சொல்லும்போது பாரதியார் என்ன பொருளை உள்ளத்தில் கொண்டிருக்கிருர் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஆர்ய என்ற சொல் சிலருக்குக் குழப்பத்தைத் தருகின்றது. பாரதியாருக்கு அந்தக் குழப்பம் என்றும் இருந்த தில்லை. ஆர்ய ஸ்ம்பத்து என்று சொல்லும்போது, அது இந்துஸ்தானத்தின் நாகரீகம் என்று தெளிவாக அவர் சொல்லுகிரு.ர். புனர்ஜன்மம் என்ற கட்டுரையிலே அவர் எழுதி யுள்ளதைப் படித்தீர்களா?