பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 களைப் போல் படிப்பு முறைகள் ஏற்பாடு செய்துகொள்ள வழியில்லை. நமது சொந்த ஜன்ம பூமியிலே முக்கிய அதிகாரங்களெல்லாம் அந்நியர்களைச் சேர்ந்த தாய் உள்ளது. ஊழிய வேலைகளையே நாம் செய்யவேண்டும். நமக்கு அவர்கள் பார்த்து 'இட்டதே சட்டம், வைத்ததே வாழ்க்கை." மேலும் கன லாபமுள்ள வர்த்தக வியாபாரம், கைத் தொழில் முதலியவற்றிலெல்லாம் அவர்களே முதலாளி களாயிருந்து லாபங்களையெடுத்து தமது துார பந்தத்திலே கொண்டு சேர்க்கிருர்கள். கூலிப் பிழைப்புத்தான் நமக் கெல்லாம் விதித்திருக்கிருர்கள். நாம் ஆயுதங்களைத் தொடாத பேடிகளாக இருக்க வேண்டுமென்றும் ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந் தால் தண்டனையென்றும் ஏற்பாடு செய்து விட்டார்கள். நிராயுதபாணிகளை அவர்கள் இஷ்டப்படியெல்லாம் நடத் வது எளிதல்லவா? வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண் டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்குநாள் சொல்ல முடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்ருர். இப்போது மனித ரூபமாக அவ தாரம் செய்யவில்லை. அவருடைய அவதா ரத்தின் பெயர் சுதேசியம் அவருடைய ஆயுதம் Byool. அதாவது அன்னிய சம்பந்த விலக்கு அல்லது பஹறிஷ்காரம்; அவரிடைய மந்திரம் வந்தே மாதரம். நன்றி-பாரதி தரிசனம் - இரண்டாம் பாகம்