பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. கிச்சடி 19 ஜனவரி 1916 'ஸ்வதந்திரமே மனிதரை ஸ்வதந்திரத்திற்குத் தகுதி யாக்குகிறது (அதாவது நீரிலே இறங்கித்தான் ஒருவன் நீச்சுப் படிக்க முடியும்; இல்லாவிட்டால் முடியாது என்பது போல.) இந்த வாக்கியம் மகாகீர்த்தியுடன் நெடுங்காலம் இங்கிலாந்தில் முதல் மந்திரியாக இருந்த க்ளாட்ஸ்டன் என்பவர் சொல்லியது. நல்ல ராஜ்யத்தைக் காட்டிலும் ஸ்வராஜ்யம் நல்லது; இது கூறிய பானர்மான் என்பவரும் இங்கிலீஷ் முதல் மந்திரி ஸ்தானம் வகித்தவரேயாம். ஸ்மஸ்கிருதம் முதலிய புராதன பாஷைகள் படித்த வைதீக பண்டிதர்களைப் போலவே தேசத்தில் இங்கிலீஷ் படித்த வித்வான்களும் பெரும்பான்மையாகப் புத்தகப் பழக்கம் அதிகமாகவும் லெளகிகப் பழக்கம்குறைவாகவும் வைத்துக் கொண்டிருக்கிருர்கள். எல்லாம் நாளடைவில் சீர்படு மென்று நம்புகிறேன். ஒகோ, இந்த மேற்கோள் சங்கதி எடுத்ததிலிருந்து என்னையும் இன்று அந்தக் குணம் பலமாகப் பிடித்துக் கொண்டது. லார்ட் ஹால்டேன் என்று ஒரு இங்கிலீஷ் மந்திரி இப்போது பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிரு.ர். இவர் நல்ல மேதாவி இவர் சொல்கிருர்: 'இந்த யுத்தம் முடிந்தவுடனே ஜனதிகாரம் வந்து நம் முன்னே நிற்கும் (அதாவது பொது ஜனங்கள் கையிலே அதிகாரம் வந்து தங்கும்.) நம்முடைய எஜமான்கள் பொது ஜனங்கள். நம்மீது அதிகாரம்