பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I70 டைய ஆட்சிக் காலத்தில் இவரைப் பற்றி இந்திய ஜனங் களும் ஜனத்தலைவர்களும் கொண்டிருந்த எண்ணம் பலம் அடைவதற்கு நாள்தோறும் புதிது புதிதாகக் காரணங் களேற்பட்டுக் கொண்டே வருகின்றன. நன்றி : பாரதி தரிசனம்-முதற் பாகம் 67. புதிய வருஷம் ஜனவரி 19, 1907 தமிழர்களாகிய நமக்கு இவ்வாரம்பத்திலேயே புதிய வருஷம் பிறந்திருக்கின்றது. நம் முன்னேரெல்லாம் இப்புதிய வருஷம் எல்லா மங்களமும் கொண்டு வருமாறு ஸர்வமங்கள மூர்த்தியாகிய இறைவனைப் பிரார்த்திக் கின்ருேம். காலசக்கரமானது மேன்மேலும் சுழன்று கொண்டிருக்கின்றது. அதன் ஒரு வட்டத்தை ஒரு வருஷ மென்று கொள்ளுகிருேம். இவ்வாறு ஒவ்வொரு வருஷத் திலும் ஜீவகணங்கள் அபிவிருத்தி அடைந்துகொண்டே செல்ல வேண்டுமென்பது தெய்வ சங்கற்பம். எனினும் ஜீவகணங்களிலே ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தனி உயிரிலும் அதனதன் செய்கை (கர்ம) விளைவிற் கிணங்க மேற்பட்டாயினும் இழிவடைந்தாயினும் போகின்றது. ஜீவ இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்ருல் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழ்ப்பட்டே தீரவேண்டும் மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை. பெருமையடைய முயலாதவன் வறுமையடைந்தே தீரவேண்டும். ந ல் வ ழி ப் ப ட முயலாதவன் தீவழிப்பட்டே தீருவான். மத்திய நிலையில் நிற்க முடியாது. தமிழர்களாகிய நாம் சென்ற ஒரு வருஷத்திலே எவ்விதமான முயற்சிகளில் இறங்கியிருக்கின்ருேம், என்ன