பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்" இவ்வாறு ஏகமாக, எவ்விதப் பிரிவும் இன்றி இருக்கும் பாரத தேசத்தை நமக்குக் காட்டுகிரு.ர். "சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம் நீதி நெறியினின்று பிறர்க் குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்ருேர்" குறுகிய பார்வை, குறுகிய எண்ணம், குறுகிய சாதிப் பிரிவுகள், குறுகிய மனப்பான்மை எல்லாவற்றையும் இந்தக் கவிதை தகர்த்துத் துளாக்கிவிடுகின்றது. அதே வேளையில், "ஆயுதம் செய்வோம்நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம்கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்" என்று மறுமலர்ச்சி இந்தியாவை உருவாக்கும் வேகத்தை யும் பாரதியார் குறிப்பிட்டுவிடுகிரு.ர். ஒளிமிக்க பாரததேசத்தைப் பாரதியார் தமது கவிதைக் கண்ணுல் கண்டதோடு மட்டும் நின்று விடவில்லை. அந்தப் பாரதத்தை நமக்குக் காட்டி, மகத் தான சாதனை செய்துவிடுகிரு.ர். ஆனல் பாரதியார் தம் காலத்தில் கண்ட இழிநிலை களையும் எடுத்துக் காட்டி வன்மையாக அவற்றைச் சாடாமல் விட்டுவிடவில்லை. பாரத தேச த்தின் பழங்கால,